Tuesday, March 25, 2008

தோற்றம்

தோற்றம் : 01.02.2008

நோக்கம் :
தற்போதைய நவீன ஊடகங்கள் உட்பட அனைத்துவகை பெரும்பான்மை ஊடகங்களும் ஊடக அறநிலையிலிருந்து பிறழ்ந்து செயல்படுவது வேதனையைக் கொடுக்கின்ற அதே வேளையில் நமது கடமையும் அதிகரித்திருக்கின்றது. இந்நிலையில் மக்களோடு மக்களாக நின்று பேசக்கூடிய உண்மை, அறநிலை பிறழாத மாற்று ஊடகங்களுக்கான தேவை அதிகரிக்கின்றது. இந்த தேவைக்காகவும் "கடந்த வரலாறுகளை கண்டவன் எழுதினான்; நிகழ்வரலாற்றை நாம் எழுதுவோம்" எனும் கருத்தையும் முன் வைத்து மாற்று ஊடக இயக்கமாக எழுகிறது இந்த தென்திசை ஊடக இயக்கம்.

தோற்றுவித்தோர் : பணி. விக்டர், நாகர்கோவில்.
கவிஞர். இரா. அரிகரசுதன், நாகர்கோவில்.

செயல்பாடுகள் :

1. சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் திரையிடல்.
2. சிறந்த மாற்று ஊடகப் படைப்பாளிகளை ஊக்குவித்தல், உருவாக்குதல்.
3. மாற்று ஊடகப் பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல்.
4. பல்வகை ஊடகப் படைப்புகளை உருவாக்குதல்.
5. ஊடக ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
6. ஊடகங்களின் வளர்ச்சிப் பாதையில், எதிர்காலத்தை நோக்கியப் பயணத்தில் பங்களித்தல்.
7. சமூகத்தின் இரசனைப் போக்கை செம்மையுறச் செய்வதில், மாற்று இரசனைகளை உருவாக்குவதில் பங்கெடுத்தல்.
8. ஏழை படைப்பாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு படைப்பு சார்ந்த வகையில் உதவிபுரிய முனைதல்.
9. மாதம் ஒரு திரையிடல் நடாத்துதல்.
10. உலக அளவில் படைப்பாளர்களுக்கான வாய்ப்புகளை படைப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை பங்கெடுக்க தூண்டுதல்.
உறுப்பினர்கள் : மேல்குறிப்பிட்ட நோக்கம், செயல்பாடுகளுக்கு எவ்வகையில்
உதவி புரிபவராக இருந்தாலும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவர்.

தொடர்பிற்கு : suthanngl@gmail.com

No comments: